பொம்மிடி அருகே மண் கடத்த முயற்சி செய்தவர்கள் கைது
பொம்மிடியை அடுத்த வேப்பாடி ஆற்றின் புறம்போக்கு நில பகுதியில் நேற்று மாலை நுரம்பு மண்ணை வெட்டி சிலர் கடத்த முயற்சி செய்த நபர்கள் கைது
Update: 2024-03-30 10:03 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடியை அடுத்த வேப்பாடி ஆற்றின் புறம்போக்கு நில பகுதியில் நேற்று மாலை நுரம்பு மண்ணை வெட்டி சிலர் கடத்த முயற்சி செய்வதாக பொ.மல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணி, பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர்கள் வேப்பாடி ஆற்றின் பகுதியில் பொக்லைன் எந்திரம், டிராக்டர் மூலம் நுரம்பு மண்ணை வெட்டி எடுத்து கடத்த முயன்றதாக விஜயநகரம் பகுதியை சேர்ந்த டிரைவர்கள் பூவரசன், இவருடைய தம்பி ஹரிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ.8 லட்சம் மதிப்பிலான பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.