ஆதிசங்கரர் ஜெயந்தி விழா முன்னிட்டு திருவீதி உலா

தர்மபுரி கடைவீதி பகுதி அருகேஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா முன்னிட்டு ஆதிசங்கரர் ஸ்வாமி திருவீதி விழா நடைபெற்றது

Update: 2024-05-12 13:13 GMT

ஆதி சங்கரர் 

தர்மபுரி ஸ்ரீ சங்கர ஜெயந்தி கமிட்டி சார்பில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா சத்திரம் தெருவில் உள்ள அருணாச்சல ஐயர் சத்திரத்தில் கடந்த 6ம் தேதி சாம்ப பரமேஸ்வர பூஜை, ருத்ரத்ரிசதி அர்ச்சனை, சிவபுராண பாராயணத்துடன் துவங்கியது.

7ம் தேதி சுப்ரமணிய பூஜை, கந்தசஷ்டி கவச பாராயணம், 8ம் தேதி விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை, 9ம் தேதி தட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம், 10ம் தேதி லலிதா த்ரிசதி அர்ச்சனை, 11ம் தேதி சகஸ்ர காயத்ரி ஜபம் ஆகியவை நடந்தது. ஸ்ரீ ஆதிசங்கரர் அதிகாலையில் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனமும் அதை தொடர்ந்து ஸ்ரீ ஆதிசங்கரர் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

முக்கிய நாளான இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருவீதி உலா சத்திரத்தில் இருந்து புறப்பட்டு சீனிவாசராவ் தெரு, கடைவீதி, அக்ரஹாரத்தெரு வழியாக சத்திரத்தை அடைந்தது. காலை 11 மணியளவில் விசேஷ பூஜைகள், அர்ச்சனைகள் நடந்தது. பகல் 12 மணியளவில் மந்திர புஷ்பம், உபச்சாரங்கள், மகா தீபாராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் சாய்ராம், சீனிவாசன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News