சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்
சங்கரன்கோவிலில் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி சாா்பில், மத்திய அரசின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா, தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகள் 32 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். ஆணையா் சபாநாயகம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ ராஜா பங்கேற்று, 6 உணவு வியாபாரிகள், 8 பழம்- காய்கனி வியாபாரிகள் 8, 18 பூ வியாபாரிகளுக்கு வண்டிகளை வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் இா்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், மேலாளா் செந்தில் வேல்முருகன், கணக்காளா் பாலசுப்ரமணியன், திமுக நகரச் செயலா் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினா் மாரிசாமி, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வராஜ், வேல்ராஜ், ஷேக்மைதீன், ராஜாஆறுமுகம், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன், வீரா, வீரமணி, பசுபதி, ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.