லாரி டயர் வெடித்து விபத்து - 5 தொழிலாளிகள் காயம்

மன்னார்குடி அருகே பேவர் பிளாக் கல் ஏற்றி வந்த மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பெண் தொழிலாளிகள் காயமடைந்தனர்.

Update: 2024-05-28 06:21 GMT

விபத்துக்குள்ளான மினி லாரி 

மன்னார்குடி தஞ்சாவூர் சாலையில் காரக்கோட்டை பகுதியில் தஞ்சையில் இருந்து பேவர் பிளாக் கல் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் லாரி நிலை தடுமாறி சாலை ஓரத்தில் லாரி சாய்ந்தது . இதில் லாரியில் இருந்த  ஐந்து பெண் தொழிலாளிகள்  படுகாயம் அடைந்தனர் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News