1000 பேருக்கு உணவு வழங்கிய தவெகவினர்
திருப்பத்தூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 1000 நபர்களுக்கு தவெகவினர் உணவு வழங்கி அசத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 12:09 GMT
தவெக சார்பில் அன்னதானம்
திருப்பத்தூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 1000 நபர்களுக்கு உணவு வழங்கி அசத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, திருப்பத்தூர் அடுத்த மாயப்பிள்ளையார் கோவில் தெரு மற்றும் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், கோட்டை தெரு பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவீன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது.