சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

பள்ளிபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-26 14:02 GMT
பைல் படம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில், பள்ளிபாளையம் போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பள்ளிபாளையம் ஆவரங்காடு ஜனதா நகர் நகராட்சி கழிப்பிடம் அருகே சட்ட விரோதமாக, கூடுதல் விலை வைத்து மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ஆவரங்காடு பகுதியை சேர்ந்த அய்யனார் வயது 38, செல்வகுமார் வயது 40 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News