தாந்தோணிமலை அருகே செல்போனை களவாடிய இருவர் கைது
தாந்தோணிமலை அருகே செல்போனை களவாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கணபதிபாளையம் வடக்கு, பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 37. இவர் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7:20 மணி அளவில், தாந்தோணி மலை, காந்திநகர் பகுதியில் உள்ள ஸ்டார் மளிகை கடை அருகே தனது டூ வீலரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கு முன்பு, தனது செல்போனை டூவீலரின் டேங்க் கவரில் வைத்து விட்டு சென்றார்.
மற்ற கடைகளில் பொருட்களை வாங்கி வந்து, திரும்பி வாகனத்தை எடுக்கும்போது செல்போனை காணாத கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களிடம் செல்போன் குறித்து கேட்டபோது, யாரும் கவனிக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் தனது செல்போனை யாரோ களவாடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கனகராஜ்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போது, கரூர் மாவட்டம், மண்மங்கலம், சோமூர், முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது 23 மற்றும் கரூர் கே எம் சி காலனியை சேர்ந்த சாரதி வயது 23 ஆகிய இருவரும் சேர்ந்து, கனகராஜன் செல்போனை களவாடியது தெரியவந்தது. எனவே இருவரையும் கைது செய்து, களவாடப்பட்ட செல்போன்,
ரூபாய் 18 ஆயிரத்து 800 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல் துறையினர்.