இரண்டு நாட்கள் நடந்த தேசிய கருத்தரங்கம்

கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடந்தது

Update: 2024-03-19 11:30 GMT

கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடந்தது


சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் பலதரப்பட்ட உத்திகளுடன் நிலையான இயற்கை சார்ந்த தயாரிப்புகள், செயல்முறை மேம்பாடு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் 2 நாட்கள் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக திருச்சி என்.ஐ.டி. எந்திரவியல் துறை பேராசிரியர் ஜெரோம், பதிவாளர் நாகப்பன், முதல்வர் சசிகுமார், பேராசிரியர்கள் ஜெரால்டு, அன்பு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

முதல் நாள் கருத்தரங்கில் எந்திரவியல், கட்டிடவியல், மின்னணுவியல், மின்னியல், மருந்தியல், அறிவியல் மற்றும் மனிதநேயம் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை 3 பிரிவுகளாக பிரித்து 3 கருத்தரங்கு கூடத்தில் பவர்பாயிண்ட் விளக்க காட்சிகளை நிபுணர் குழுக்கள் முன்னிலையில் கட்டுரை ஆசிரியர்கள் விவாதித்தனர். 2-ம் நாள் கருத்தரங்கில் பயோ டெக்னாலஜி, பயோமெடிக்கல், மேலாண்மைத்துறை, பிசியோதெரபி, கணினி சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை 3 பிரிவுகளாக பிரித்து 3 வெவ்வேறு கருத்தரங்க கூடத்தில் நிபுணர் குழுக்கள் முன்னிலையில் விளக்கி கூறப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பேசிய 3 நபர்களை நிபுணர்கள் தேர்வு செய்தனர். நிறைவு விழாவில் முதல்வர் சசிகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஜீ.ஏ.வி.எஸ். டெக்னாலஜிஸ் மூத்த துணை தலைவர் சந்திரமவுலீசுவரன் பேசினார். முதல் பரிசு, 2-ம் பரிசு, 3-ம் பரிசு என 30 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் சந்திரமவுலீசுவரன், அதீனா மிளகை பாண்டியன், ஏழுமலை பெருமாள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Tags:    

Similar News