விவசாய தொழில் நுட்பம் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி !
மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில்,இயற்கை விவசாய தொழில் நுட்பம் குறித்து, இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.
மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில்,இயற்கை விவசாய தொழில் நுட்பம் குறித்து, இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் சித்தார்த் தலைமையில், உதவிபேராசிரியர் காயத்ரிஏற்பாட்டில் நடந்த பயிற்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த பயிற்சியில்,விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத் துவம், இயற்கை விவசாயதொழில்நுட்பத்தின் மேம்பாடு உள்ளீடு உற்பத்தி, பாரம்பரிய பயிர் வகைகள் உள்ளிட்டவை குறித்து, துறை சார்ந்த வல்லுனர்கள் விளக்கினர்.
தொடர்ந்து, பஞ்ச கவ்யா, பசுந்தாள் உரங்கள் தயாரிப்பது குறித்து, விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.அதன்பின், வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள இயற்கை பண்ணையில் பயிரிடப்பட்டு உள்ள வெண்டைச்செடிகளை விவசாயிகள் பார்வையிட்டனர்.