மதுரை மாநகராட்சியில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்

மதுரை மாநகராட்சியில் இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-06-16 12:13 GMT

மதுரை மாநகராட்சியில் இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


மதுரையில் பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு மதுரை மாநகராட்சி வைகை குடிநீர் விநியோகம் வைகை குடிநீர் இரண்டில் 700 எம்.எம். பைப்பில் ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டிக்கு வைகை இரண்டாவது குடிநீர் விநியோகத்தை நிறுத்தி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள உள்ளது பணிகளுக்காக 19.06.2024 புதன்கிழமை அன்று வைகை வடகரை பகுதிகளான வார்டு எண் 10 முதல் 16 வார்டுகள் மற்றும் வார்டு எண் 21 முதல் 35 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் வைகை குடிநீர் விநியோகம் வைகை 1ல் 1000 எம்.எம்.பி.எஸ்.சி பைப்பில் இருந்து கோச்சடை மேல்நிலைத்தொட்டிக்கு வைகை முதல் குடிநீர் விநியோகத்தை நிறுத்தம் செய்து 300 எம்.எம். டி.ஐ பைப்புடன் பிரதான குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று வைகை தென்கரை பகுதிகளான வார்டு எண் 46, 47, 48, 49, 53, 70, 72, 74 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News