தனியார் உணவகத்தில் தீ பற்றிய விபத்தில் இருவர் காயம்
திருப்போரூர் தனியார் உணவகத்தில் தீ பற்றிய விபத்தில் இருவர் காயம்.;
Update: 2024-04-24 10:40 GMT
தீ விபத்து
திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, பெட்ரோல் பங்க்கை ஒட்டி தனியார் உணவகம் உள்ளது. நேற்று முன்தினம், வழக்கம்போல் உணவகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இரவு 11:00 மணியளவில், உணவக நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த காஸ் அடுப்பு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே, அருகே பெட்ரோல் பங்கிலிருந்து தீயணைக்கும் கருவியை கொண்டு வரப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில், தகவல் அறிந்து வந்த திருப்போரூர் தீயணைப்பு துறையினர், தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில், உணவகத்தில் இருந்த பணியாளர் ஏகாம்பரம், கவுதம் ஆகியோருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. மேலும், சிசிடிவி கேமரா, பக்கவாட்டு சுவரில் ஒட்டப்பட்ட டைல்ஸ் ஆகியவை தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.