தூத்துக்குடி அருகே பைக் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலியாகினர்.;

Update: 2024-01-16 13:06 GMT

பலியான வாலிபர் 

தூத்துக்குடி அத்திமரப்பட்டி பகுதியை சார்ந்த ஜெயமுருகன் என்பவரது மகன் அருண் வயது 20, வெல்டர் வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று இரவு முத்தையாபுரத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு முத்தையாபுரத்தில் இருந்து அத்திமரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன், வயது 58, சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவரது வாகனம் என இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் துடி துடித்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொங்கல் பண்டிகை அன்று அப்பகுதியைச் சார்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News