செல்போன் வாங்குபவர்கள் போல் நடித்து களவாடிய இருவர் கைது
புதிய செல்போன் வாங்குபவர்கள் போல் நடித்து செல்போன்களை களவாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், புலியூர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர், புலியூர், அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சண்முகம் வயது 39. இவரது கடைக்கு மார்ச் 24ஆம் தேதி காலை 11 மணி அளவில்,கரூர் தொழில் பேட்டை,
நல்லப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற கோபி வயது 37 என்பவரும்,கரூர் மேலப்பாளையம், ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த பிரகாஷ் வயது 41 ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது புதிய செல்போன் வாங்க வந்துள்ளதாகவும், செல்போன்களை காட்ட சண்முகத்திடம் கேட்டுள்ளனர்.
சண்முகமும் தன்னிடம் இருந்த புதிய மொபைல் ஃபோன்களை எடுத்துக்காட்டி உள்ளார். செல்போன்களை வாங்க வந்தது போல், செல்போன்களை பலமுறை பரிசோதித்துப் பார்த்து பின்னர், அங்கு இருந்த 22 சாம்சங் மொபைல் ஃபோன்களை களவாடி சென்றுள்ளனர்.
தனது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த மொபைல் போன்களை இருவர் களவாடி சென்றது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கார்த்தி என்கிற கோபி மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து,
களவாடப்பட்ட அந்த செல்போன்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் என மதிப்பீடு செய்து, இருவரையும் சிறையில் அடைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.