முன் விரோத தகராறில் இருவர் படுகாயம். மூவர் மீது வழக்கு பதிவு.

உறவினர்கள் இடையே தகராறில் இருவர் படுகாயம். மூவர் மீது வழக்கு பதிவு.ஒருவர் கைது.

Update: 2024-01-20 06:25 GMT
கரூர் மாவட்டம், க.பரமத்தி எல்லைக்கு உட்பட்ட, புகலூர் தாலுகா,முன்னூர், வேலம்பாளையம் அருகே உள்ள கிரசர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த தங்கராஜ் மகன் பிரதீப் வயது 21. அதே பகுதியைச் சேர்ந்த திருமண்மகன் முருகன் வயது 30. பிரதீப்-பின் தந்தை மறைந்த தங்கராஜன் உடன்பிறந்த சகோதரர் சிதம்பரம் வயது 48, இவரது மகன்கள் ஹரி பிரசாத்,ஸ்ரீதரன். இவர்கள் இரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு காரணமாக, முன் விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 2023 மே மாதம் 21ஆம் தேதி இவர்களுக்குள் எழுந்த பிரச்சனை காரணமாக, பிரதீப் மீது க.பரமத்தி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் கிரஷர் மேடு பகுதியில் உள்ள முருகன் வீட்டின் அருகே பிரதீப்-பும் அதே பகுதியைச் சேர்ந்த திருமண் மகன் முருகன் வயது 30 என்பவரும் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த சிதம்பரம்,ஹரி பிரசாத், ஸ்ரீதரன் ஆகிய மூன்று பேரும், பிரதீப் மற்றும் முருகனை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பிரதீபுக்கும், முருகனுக்கும் காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்,ஹரிபிரசாத், ஸ்ரீதரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Tags:    

Similar News