கார்- டூவீலர் நேருக்கு நேர் மோதல்.

தடா கோவில் பிரிவு அருகே கார்- டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.;

Update: 2024-05-28 14:38 GMT

கோப்பு படம்

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஷாம் ரெசிடென்சி தேர்டு பிளவர் பகுதியைச் சேர்ந்தவர் அலமீன் வயது 49. இவர் மே 27ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, தடா கோயில் பிரிவு அருகே வந்த போது, எதிர் திசையில், அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி, திருமலைசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து வயது 40, அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா வயது 55 ஆகிய இருவரும் டூவீலரில் வேகமாக சென்று, அலமீன் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த காளிமுத்துவுக்கும் பின்னால் அமர்ந்து வந்த செல்லையாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அக்க்ஷயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பெற்று உடனடியாக வீடு திரும்பினார் காளிமுத்து. இந்த சம்பவம் தொடர்பாக அலமீன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய காளிமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News