கஞ்சா வழக்கில் 2 பேர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-14 16:45 GMT
கஞ்சா வழக்கில் 2 பேர் கைது

கஞ்சா விற்பனை 

  • whatsapp icon

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி கணபதி நகரைச் சேர்ந்த கனகராஜ் மகன் நாராயணன் நவீன் (19) மற்றும் கோவில்பட்டி கூசாலிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுப்புராஜ் (24) ஆகிய 2பேரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 200கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News