மானாமதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
வழிப்பறியில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-28 16:47 GMT
வழிப்பறியில் ஈடுப்பட்டவர்கள் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மகன் பாஸ்கரன். இவர் உருளி விலக்கில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இடைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் சுந்தரவேல் மற்றும் மாரநாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் ரூபாய் 500 பறித்தி சென்றதாக கூறப்படும் நிலையில் சிப்காட் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்