பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து வெண்கல பொருட்களை திருடி சென்ற இரண்டு பேர் கைது
தலைஞாயிறு அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து வெண்கல பொருட்களை திருடி சென்ற இரண்டு நபரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 06:11 GMT
பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து வெண்கல பொருட்களை திருடி சென்ற இரண்டு பேர் கைது
நாகை மாவட்டம் தலைஞாயிறு போலீசரகத்திற்கு உட்பட்ட சந்தை வழி தெரு பகுதியை சேர்ந்தவர் பூண்டி மகன் பாலு வயது 74 இவர் தனது வீட்டில் அருகில் உள்ள மாடி வீடு விலைக்கு வாங்கி அந்த வீட்டில் வெண்கல பொருட்களை வைத்து பூட்டிவிட்டு கடந்த ஐந்தாம் தேதி வெளியூர் சென்று உள்ளது சென்றுள்ளார் 13-ஆம் தேதி பாலு வீட்டுக்கு பொருந்த பார்த்தபோது மாடி வீட்டில் போட்டு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள தென்கல பொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் தலைஞாயிறு காவல் நிலையத்தில் பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு புகார் அளித்தார். புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பாலு வீட்டு பூட்டை உடைத்து வெண்கல பொருட்களை திருடிய அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சரண்ராஜ் வயது 22 மடப்புரம் சேகன் சாலக்கடை பகுதியை சேர்ந்த வேதையின் மகன் பிரவீன் ராஜ் வயது 24 ஆகிய இருவரை பிப்ரவரி 14 புதன்கிழமை மதியம் மூன்று மணிக்கு கைது செய்தனர்.