பட்டாசு திரி வைத்திருந்த இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் பகுதியில் பட்டாசு திரி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-06-16 07:33 GMT
பட்டாசு திரி வைத்திருந்த இருவர் கைது
விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தங்கேஸ்வரன் இவர் கவுண்டம்பட்டி விளக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த ஈஸ்வரன் மற்றும் ராமசாமி ஆகியோர் அது எந்தவித அரசு அனுமதியும் இன்றி ஆறு குரோஸ் மிஷின் திரிகளை சம்பவ இடத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.