வானில் தோன்றிய இரு வானவில் !
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை திடீரென கன மழை பெய்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 07:12 GMT
வானவில்
இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளாண்டி வலசு, பூலாம்பட்டி,சித்தூர், வெள்ளரி வெள்ளி, கொங்கணாபுரம், ரெட்டிபட்டி, ஆகிய பகுதிகளில் திடீரென பரவலாக கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் எடப்பாடி நகர சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வானில் இரு வானவில் தோன்றி அற்புதமாக கண்ணுக்கு இதமாக காட்சியளித்தது.