நாடாளுமன்ற தேர்தலையோட்டி இரு மாநில காவல்துறையினர் ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழக-கேரள காவல் துறை உயரதிகாரிகள் தென்காசியில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழக-கேரள காவல் துறை உயரதிகாரிகள் தென்காசியில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள சூழலில், அதற்கான பல்வேறு ஆயத்த பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டமானது தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில், தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக, கேரளா போலீசார் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று தேர்தலின் போது இரு மாநில எல்லைப் பகுதியில் மேற்கொள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், அதற்கு இரு மாநில போலீசாரும் ஒன்றிணைந்து எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.