மாணவர்கள் இருவர் குட்டையில் மூழ்கி பலி

உடுமலைப்பேட்டை அருகே மாணவர்கள் இருவர் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-01 07:55 GMT

உடுமலை அருகே உள்ள பண்ணைக்கிணறு கிராமத்தைச் ராமச்சந்திரன் என்பவரது மகன் மிதுன்ராஜ் (11) 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.இதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வினோத் (12) 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.இருவரும் நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளனர். இந்நிலையில் மிதுன்ராஜ், வினோத் வீடு திரும்பவில்லை.

இதை அடுத்து பெற்றோர், நண்பர்கள், கிராமமக்கள் இருவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில் பண்ணைக் கிணறு பகுதியிலுள்ள உள்ள ஒரு குட்டையில் சிறுவர்கள் இருவரும் சடலமாக மிதப்பதாக தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து உடல்களை மீட்டனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News