சொகுசு காரின் பின்னால் இருசக்கர வாகனம் மோதல் -இளைஞர் பலி
Update: 2023-12-05 01:01 GMT
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைரவன் இருப்பை சேர்ந்த அய்யப்பன் (19) டைல்ஸ் ஓட்டும், கூலி வேலை பார்த்து வந்தார். ஐயப்பன் தனது இரு சக்கர வாகனத்தில் ,சீர்காழி நோக்கி செல்லும்பொழுது, அரசூர் மேம்பாலத்தில், முன்னே சென்ற சொகுசு காரின் பின்னால், அதிவேகமாக மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு , சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் ஐயப்பன், ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த, சீர்காழி போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சொகுசு காரின் ஓட்டுனர், விளந்திடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.