அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருட்டு

சேலம் அரசு மருத்துமனையில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2024-01-01 03:33 GMT

அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருட்டு

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்களின் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வளாகத்தில் உணவகம் அருகில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். அப்போது, அதை கண்ட ஆஸ்பத்திரி காவலாளி, அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தார். பின்னர் அவரை ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர், வீராணம் அருகே டி.பெருமாபாளையம் ஜே.ஜே.நகர் காலனி பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 21) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்
Tags:    

Similar News