டூவீலர் மீது சரக்கு வாகனம் ஓதி விபத்து - ஒருவர் படுகாயம்
டூவீலர் மீது சரக்கு வாகனம் ஓதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-04-10 16:24 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட, புதுக்குளத்து பாளையம், பூசாரி கவுண்டன் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி வயது 56. இவர் ஏப்ரல் 8-ம் தேதி மாலை 5:30- மணி அளவில், கரூரிலிருந்து சுக்காலியூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் டி.செல்லாண்டி பாளையம், காளியம்மன் கோவில் அருகே சென்றபோது, அதே சாலையில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் வயது 52 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம், பழனிச்சாமி ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமி மகன் அஜித்குமார் வயது 33 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாக சரக்கு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.