உதகை - மேட்டுப்பாளைய மலை ரயில் சேவை துவக்கம்
மழை பாதிப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை - மேட்டுப்பாளைய மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது.
Update: 2023-12-14 09:41 GMT
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு பகுதியில் மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்தது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை வரும் மலைரையிலும் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவையும் இம்மாதம் 13-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததாலும் , மழை முன்னெச்சரிக்கை முடிந்ததாலும் 22 நாட்களுக்கு பிறகு உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.