அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

கந்திலி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2024-06-10 09:17 GMT

கந்திலி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து! தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரையும் போலிசார் தேடி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி இரவு பகல் பாராமல் மண் மற்றும் மணல் கடத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை சின்னூர் கிராமத்திலிருந்து கந்திலியை நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

Advertisement

அப்போது மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது‌. பின்னர் அப்பகுதி மக்கள் கந்திலி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் மணல் லாரியை பறிமுதல் செய்து கந்திலி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் மணல் மாஃபியா சதிஷ் என்பவரையும் கந்திலி போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News