அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து - இருவர் பலி
சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு பேர் பலியானார்கள். சிங்காரப்பேட்டை ஊராட்சி மல்லிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 45) மணி (வயது 35).
இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளைக் குட்டை பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் மல்லிப்பட்டிக்கு வரும்போது தீர்த்தகிரி வலசை பெரிய ஏரிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருவண்ணாமலை நோக்கி செல்லும் சாலையில் எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேர் உடல்களை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சொன்னார். விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் இரண்டு உயிர்களை பலி வாங்கிவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தையும், அந்தப் பகுதியில் ஏதாவது சிசிடிவி கேமரா உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.