அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-12 12:53 GMT

விபத்து 

 கரூரை அடுத்த வடக்கு காந்திகிராமம், பெரியார் நகர், இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் வயது 49. இவர் மே 9-ம் தேதி இரவு 9:30 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வானவழி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது,எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று, மகேஷ் குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

Advertisement

இந்த விபத்தில் மகேஷ் குமாருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News