வடலூர் ஜோதி நகரில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
கடலூர் மாவட்டம், வடலூர் ஜோதி நகரில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-17 13:30 GMT
ஊஞ்சல் உற்சவம்
வடலூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு இரண்டாம் நாள் உற்சவமாக ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஜோதி சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.