திருமணமாகாத ஏக்கத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஈத்தாமொழி வண்டாவிளை பகுதியில் திருமணமாகாத ஏக்கத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-08 12:04 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி வண்டாவிளை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (33). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்து விட்டார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகி தனி தனி குடும்பங்களாக வசித்து வருகின்றனர். சதாசிவன் தனது தாயார் ஜானகி பராமரிப்பில் இருந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த ஏக்கத்தில் அதிக அளவில் மது அருந்திவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் சதாசிவம் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.