மத்திய அரசின் 'ஹிட் அன் ரன்' சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 'ஹிட் அன் ரன்' சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் வாகன ஓட்டுனர்கள் மனு அளித்தனர்.

Update: 2024-01-03 14:55 GMT

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 'ஹிட் அன் ரன்' சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் வாகன ஓட்டுனர்கள் மனு அளித்தனர்.

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள ஹிட் அன்ட் ரன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்கலெக்டரிடம், வாகன ஓட்டுநர்கள் மனு. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம், சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:& எங்களது சங்கத்தை சேர்ந்த பலர் பல்வேறு பகுதிகளில் வாகனம் ஓட்டி வருகிறார்கள். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள (ஹிட் அன்ட் ரன்) இடித்து விட்டு ஓடு என்ற சட்டத்தின்படி எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களின் போது, முறையாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தராமல் சம்பவ இடத்தை விட்டு ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News