உத்திரமேரூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
மழையால் சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 05:45 GMT
உத்திரமேரூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை 28 கி.மீ., நீளமுடையது. இச்சாலை வழியாக, தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக இச்சாலையோரம் உள்ள காலுார், வேடல், பேரமநல்லுார், ஆற்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சாலையில் வேகமாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் சாலை சேதமடைந்த பகுதியில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மழையால் சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."