ஆசூர் கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல் !
மும்முனை சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-10 09:20 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், ஆசூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவளூர், காலுார் செல்லும் மும்முனை கூட்டு சாலை சந்திப்பு உள்ளது.
இந்த சாலை வழியாக இளையனார்வேலுார், நெல்வேலி, மேல்புதுார், கீழ்பேரணமல்லுார், அவளூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
மும்முனை சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மும்முனை சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைத்து, வெள்ளை நிற வர்ணமும், இரவில் ஒளிரும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.