உத்திரமேரூர் - மானாம்பதி சாலை விரிவாக்க பணி தீவிரம்

சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2024-03-12 08:37 GMT

சாலை விரிவாக்க பணி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து, மானாம்பதி வழியாக வந்தவாசியை இணைக்கும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லுாரிக்கான பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இச்சாலை வழியாக, மாங்கால் 'சிப்காட்' தொழிற்சாலைகளுக்கு, பல பகுதிகளில் இருந்து, உதிரி பாகங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, அகலம் குறைவாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால், இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இச்சாலையை நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக உத்திரமேரூர் நகரில் துவங்கி வேடபாளையம் அடுத்த, பங்களாமேடு வரையிலான இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Tags:    

Similar News