வைகாசி தேரோட்டம்

அன்னவாசல் அருகே வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

Update: 2024-06-04 05:53 GMT

இலுப்பூர்: அன்னவாசல் அருகே வயலோகத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகபடி தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி காலை முதல் வயலோகம், அன்னவாசல்,இலுப்பூர், குடுமியான்மலை, மாங்குடி, புதுார், குளவாய்ப்பட்டி, மண்ணவேளாம் பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், கரும்பு தொட்டில், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 3.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளியதும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் வைகாசி திருவிழா நிறைவ டைகிறது.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர். ஊர்மக்கள் செய்திருந்தனர். அன்னவாசல் இன்ஸ் பெக்டர் லதா தலைமையில் ஏராளமான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News