அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகாசி விசாக நாலாம் திருவிழா கோலாகலம்
அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் பிரசித்தி பெற்ற விழாவான வைகாசி விசாகத் திருவிழா கடந்த செவ்வாய் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற ஆண் பெண் சமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் இணைந்த உருவில்காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் பிரசித்தி பெற்ற விழாவான வைகாசி விசாகத் திருவிழா கடந்த செவ்வாய் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கட்டளைதாரர்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் அர்த்தநாரீஸ்வரர் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளும் நாலாம் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
படிக்கட்டுகள் வழியாக கீழே வந்தஅர்த்தநாரீஸ்வரருக்கு ஒவ்வொரு மண்டபத்திலும் கட்டளைதாரர்களின் உபய நிகழ்ச்சி நடைபெற்றது நள்ளிரவு மலை அடிவாரம் வந்த அர்த்தநாரீஸ்வரர் புஷ்ப பல்லக்கில் பவனி வந்தார். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை ஒட்டி வானவேடிக்கை மாணவ ஏ பி. ஜே கலாம் சிலம்ப பள்ளி மாணவிகளின் சிலம்பாட்டம் அடிமுறை பயிற்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.