கடையின் பூட்டை உடைத்து பணம் , சிசிடிவி பாக்ஸ் திருட்டு

வாணியம்பாடி அருகே கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சிசிடிவி கேமிரா பாக்‌ஸை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2024-03-13 03:29 GMT

திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி அடுத்த நாதிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவர், அதே பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்.. இந்நிலையில் ரவி நேற்று இரவு தனது கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு வீட்டிற்குச்சென்ற நிலையில், இன்று காலை ரவி மீண்டும் தனது கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் மற்றும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பாக்ஸையும் மர்ம நபர் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக இதுகுறித்து ரவி அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இக்கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அம்பலூர் காவல்துறையினர், கொள்ளைச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News