காட்பாடியில் வாசிப்போம் நோசிப்போம் திட்டம்

Update: 2023-12-15 04:43 GMT

மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் ஆக்ஸிலியம் அரசு உதவி பெறும் தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாசிப்போம் நேசிப்போம் திட்டத்தின்படி நூல்களை வாசிக்கும் பழக்கத்தினையும், முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியினையும் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளையின் சார்பில் அவைத்தலைவர் ஜனார்த்தனன் வழங்கினார். இந்த சிறப்பு முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி தலைமை தாங்கினார்.

முன்னதாக திட்ட அலுவலர் அமுதா ஆரோக்கியமேரி வரவேற்று பேசினார், திட்ட அலுவலர்கள் உமாமகேஸ்வரி, காயத்திரி, மைய இயக்குநர் லூக்காஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் பல்கலைகழக திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் இதனை தொடக்கி வைத்தார். செயலாளர் மேரிஜோசப்பின் ராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். டி .கே.புரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்கண்ணா, சேனூர் ஊராட்சி தலைவர் சாந்திமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதன் ஒரு பகுதியாக முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியும், வாசிப்போம் நேசிப்போம் பழக்கத்தினையும் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் அவைத்தலைவர் ஜனார்த்தனன் வழங்கினார்.

அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடு நூல்களை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார். இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் , விழிப்புணர்வு கலை நிகழ்வுகள், பெண்கல்வி, பெண்களுக்கு உயர்கல்வி, வாசிப்பு முகாம், கணக்கும் இனிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி முதலுதவி பயிற்சி உணவு மேலாண்மை, தாய், குழந்தை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News