பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழுக்குமர போட்டி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் திருவிழாவை கொண்டாடும் விதத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ,ஸ்ரீவில்லிபுத்தூரில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமைக்காகவும் நல்லினக்கத்துக்காகவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கொளூர்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமையும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வழுக்குமரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்வது மிகுந்த உற்சாகத்தை மனவலிமையும் தருவதாகும் தமிழர்கள் பண்பாடு அழியாமல் இருக்க இத்தகைய விளையாட்டு உற்சாகப்படுத்துவதாகவும் கலந்து கொண்ட வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.