கிராபைட் எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய விசிகவினர் ஆர்ப்பாட்டம்

கிராபைட் கனிம வளம் எடுப்பதற்கு ஒன்றிய அரசு டெண்டர் ஒப்பந்தம் வழங்கியதால் சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என கூறி திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பு விசிகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-01-08 05:43 GMT
கிராபைட் எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திவேங்கடத்தில் குறிஞ்சாக்குளம், சின்னகாளாம்பட்டி, சங்குபட்டி ஆகிய கிராமங்களில் கிராபைட் கனிம வளம் எடுப்பதற்கு ஒன்றிய அரசு டெண்டர் ஒப்பந்தம் வழங்கியதால் அக்கிராமங்களைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் மற்றும் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன், திருவேங்கடம் பேரூர் செயலாளர் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், மண்டல துணைச்செயலாளர் குழந்தை வள்ளுவன், தென் வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாறினர். ஆர்ப்பாட்டத்திள் விடுதலைச்சிறுத்தை கட்சியின் தொழிலாளர் முன்னணி அமைப்பாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News