பல்லடத்தில் விசிக நகர செயலாளருக்கு தர்ம அடி!
பல்லடத்தில் விசிக நகர செயலாளர் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில், ரவுடிசம் அதிகரித்துள்ளதா என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் வசிப்பவர் செல்வம் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர செயலாளர் இவர் நேற்று அவரது வீட்டின் அருகே வாலிபர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாகவும் அப்போது ஒருவருக்கு ஒருவர் வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகவும் மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதாக செல்வம் தெரிவித்து இருப்பதாகவும் அதற்கு கோபம் அடைந்த வாலிபர்கள் அவரை ச ஓட ஓட ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு செல்வம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இப்போது அதே பகுதியை சேர்ந்த விஜி , கோகுல், முருகன் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் சம்பவத்தில் ஈடுபட்டதை அறிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் பல்லடத்தில் பெறுவதால் ரவுடிசம் பெருகிவிட்டதா ஆயுத கலாச்சாரம் பல்லடத்தில் அதிகரித்து விட்டதா என்று பொதுமக்கள் பலரும் மிகப்பெரிய அதிருப்திகள் இருக்கும் நிலை தற்போது பல்லடத்தில் நிலவுகிறது.