கோட்டை மாரியம்மன் கோவிலில் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி

Update: 2023-12-12 05:10 GMT

வீணை வாசிக்கும் நிகழ்ச்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து மண்டலாபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 45-வது நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, வீணை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு வீணை வாசித்தனர். முன்னதாக கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக காலை நவ சண்டியாக விழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி கலந்து கொண்டார்.
Tags:    

Similar News