வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் விழா - பேருந்துகள் 24 மணிநேர இயக்கம்
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி அனைத்துப் பேருந்துகளும் வீரபாண்டியில் நின்று பக்தர்கள் ஏற்றி, இறக்கி செல்லும் வகையில் செயல்பட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
தேனி மாவட்டத்தில் வரும் 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவிருக்கும் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் அரசுபேருந்துகள் வீரபாண்டிக்கு இயக்கப்படும். வீரபாண்டி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வீரபாண்டியில் நின்று பக்தர்கள் இறங்கி ஏறும் வகையில் செயல்பட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாக்காலமான 07.05.2024 முதல் 14.05.2024 முடிய தேனியிலிருந்து சின்னமனூர் மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் உப்புக்கோட்டை விலக்கு , மார்க்கையன்கோட்டை விலக்கு, குச்சனூர், வழியாக மாற்றுப்பாதையில் சின்னமனூர் செல்லும், மேலும், சின்னமனூரிலிருந்து தேனி மார்க்கத்தில் வரும் அனைத்து வாகனங்களும் உப்பார்பட்டி பிரிவிலிருந்து தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி வழியாக தேனி வந்தடையும். கோவில் வளாகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.