அவரை விலை வீழ்ச்சி கிலோ ரூ.30க்கு விற்பனை
காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் வாகனங்களில் கிலோ அவரைக்காய் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
Update: 2024-04-16 15:40 GMT
ஆந்திர மாநிலத்தில் விளையும் அவரைக்காய், காஞ்சிபுரம் சந்தைக்கு அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த 9ல், உகாதி பண்டிகையொட்டி, ஆந்திர மாநிலத்தில் உள்ள காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, விவசாய கூலித்தொழிலாளர்களும், குடும்பத்துடன் உகாதி பண்டிகையை கொண்டாட விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு அவரைக்காய் வரத்து நின்றுவிட்டது. இதனால், மூன்று நாட்களாக, கிலோ அவரைக்காய் 60 - 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு நேற்று அவரைக்காய் வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சியடைந்தது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் வாகனங்களில் கிலோ அவரைக்காய் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.