நாகை மாவட்டம் அகரக்கொந்தகையில் காய்கறி பண்ணை பள்ளி பயிற்சி

நாகை மாவட்டம் அகரக்கொந்தகையில் காய்கறி பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது.

Update: 2024-06-06 13:50 GMT

நாகை மாவட்டம் அகரக்கொந்தகையில் காய்கறி பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது.


நாகை மாவட்டம் அகரக்கொந்தகையில் காய்கறி பண்ணை பள்ளி பயிற்சி திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா அறிவுறுத்தலின்படி அகரக்கொந்தகை கிராமத்தில் காய்கறி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.இப்பயிற்சியில் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் பூச்சியியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் கலந்துக் கொண்டு காய்கறிகளில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி விவசாயிகளிடம் பேசினர்.

மேலும் விளைச்சலை அதிகரிக்க ஒரு சதம் யூரியா கரைசலை விதைத்த 30 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இட வேண்டும்,மியூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து விதைத்த 35 முதல் 45 மற்றும் 60 நாளில் தெளிக்க வேண்டும்,ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பில் இன கவர்ச்சி பொறி ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்,காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்,கார்பரில் நனையும் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும்,நூர் புழுக்களை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 400 கிலோ வேப்பம் புண்ணாக்கை விதைக்கும் உரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்,மஞ்சள் நரம்பு தேமல் நோயை கட்டுப்படுத்த 2 மில்லி லிட்டர் வேப்பம் எண்ணெய்யை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும், சாம்பல் நோய் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.இதில் அகரக்கொந்தகை பகுதியை சேர்ந்த 25-க்கு மேற்பட்ட காய்கறிகள் சாகுபடி முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பண்ணைப் பள்ளி பயிற்சியானது வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் செய்தார்.

Tags:    

Similar News