காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-31 05:52 GMT

 கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் ஒருமித்த வியாபாரிகள் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை அன்று கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டு கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கைகள் குறித்தும், மாநகராட்சி ஆணையர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ரவி தலைமை தாங்கினார். சங்க துணை செயலாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது, மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் புதிய ஒப்பந்ததாரர் வியாபாரிகளின் வாடகை வாகனங்களுக்கு வசூலிக்க வேண்டும், புதிய ஒப்பந்ததாரர் கூடுதல் வாடகை வசூலித்தால் வியாபாரிகள் தரக்கூடாது, தரைக்கடை வியாபாரிகளின் கடைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் வழக்கு முடியும் வரை 60 ரூபாய் மட்டுமே வாடகை தர வேண்டும், மூன்று மாத சந்தாவை வழங்கிட வேண்டும், தொடர்ந்து நடைபெற உள்ள அனைத்து கூட்டத்திலும் வியாபாரிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பனவாகும்.

Tags:    

Similar News