தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனை

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-21 05:03 GMT

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யும் பொருட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் தடுக்கும் பொருட்டு, 4 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரின் சோதனை பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். கச்சிராயபாளையம் சாலையில் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களில் மேற்கொண்ட சோதனை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது எவ்வித புகாரும் எழாதவாறு உரிய முறையில் சோதனை மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News