காவல் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்..!

செங்கல்பட்டில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷனில் வெட்ட வெளியில் நிறுத்தப்படுவதால், நாளடைவில் வீணாகும் அவலம் தொடர்கிறது.

Update: 2024-02-05 13:03 GMT
 செங்கல்பட்டில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷனில் வெட்ட வெளியில் நிறுத்தப்படுவதால், நாளடைவில் வீணாகும் அவலம் தொடர்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முன்விரோத மோதல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க, போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தினமும் சுழற்சி முறையில் மறைமலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்கள், திருட்டு, மோசடி, கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் என பல்வேறு வகையான குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுபோல, விபத்துகளில் சிக்கும் வாகனங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு, பிடிபடும் அல்லது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும். வழக்குகள் நீதிமன்ற கட்டுப்பாட்டுக்குள் வருவதால், விசாரணை முடிந்த பின்னரே உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படும். இது நடைமுறை. வழக்குகள் நீதிமன்றத்தைவிட்டு நகராததால், வாகனங்களும் காவல் நிலையத்தைவிட்டு நகர முடிவதில்லை. மேற்கூரை இல்லாத வெட்ட வெளியில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வெயில், மழைக்காலங்களை எதிர்கொண்டு, நாளடைவில் துருப்பிடிக்கின்றன.

Tags:    

Similar News