பாட்டிலால் தாக்கியவரை கைது செய்த திசையன்விளை போலீசார்
பாட்டிலால் தாக்கியவரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 11:39 GMT
கோப்பு படம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் மகாராஜா(56). இவரது மகள் சௌந்தர்யாவின் கணவர் பாலமுருகன்(24). இந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சௌந்தர்யா தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அங்கு நுழைந்த பாலமுருகன் தனது மாமனார் மகாராஜாவையும் பக்கத்து வீட்டுக்காரர் இசக்கிவேல் என்பவரையும் பாட்டிலால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை போலீசார் விசாரித்து பாலமுருகனை நேற்று (ஜூன் 21) கைது செய்துள்ளனர்.